“டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு” போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…. முதலமைச்சரின் அதிரடி உத்தரவு….!!!

உயிரிழந்த டாஸ்மாக் கடை ஊழியரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உரக்கடம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் 2 பேர் வழக்கம் போல கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் துளசிதாஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் டாஸ்மார்க் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மர்ம நபர்களின் தாக்குதலால் உயிரிழந்த  துளசி தாஸ் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *