“டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு” தமிழக அரசு அதிரடி …!!

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000  ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை  கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for டாஸ்மாக் ஊழியர்கள்

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் ,  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால்         36, 056 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டுக்கு 62.53 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.