அரண்டு போன பாஜக…. #தமிழ்வாழ்க, #Tamil….. ட்வீட்ட_ரை தெறிக்கவிடும் தமிழர்கள்….!!

இந்தியை எதிர்த்து  #தமிழ்வாழ்க ,  #Tamil  என்ற ஹாஷ்டாக்_கள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவதால் பாஜகவினர் அதிச்சியடைந்துள்ளனர்.

இந்தி மொழி நாளை கொண்டாடும் வகையில் இன்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்து சர்சையானது. இந்தி மொழி திணிப்புக்கான ஆரம்பமாக பார்க்கப்பட்ட அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் #StopHindiImposition , #StopHindiImperialism என்ற இரண்டு ஹாஷ்டாக்  ஹிந்தி திணிப்புக்கு எதிராக டீவீட்_டரில் தேசியளவில் ட்ரெண்ட் ஆகியது.

மத்திய அரசின் இந்தி கருத்துக்கு கடுமையாக , எப்போதும் எதிப்பு தெரிவிக்கும் தமிழர்கள் ஒரு படி மேலே சென்று #தமிழ்வாழ்க  என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்தனர்.பின்னர் இதற்கு இணையாக #Tamil என்ற ஹாஷ்டக்கையும் ட்ரெண்ட் செய்தனர். இதில் #தமிழ்வாழ்க  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் 4_ஆம் இடத்திலும் , #Tamil என்ற ஹாஷ்டக் 14_ஆவது இடத்திலும் தேசியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. இதனால் பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.