தமிழக போலீஸ் சூப்பர்..! நல்லா விசாரிச்சாங்க… உண்மையை கொண்டு வந்தாங்க … பாராட்டி தள்ளிய முபாரக் …!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவை, மங்களூர் என்ற ரீதியில் குண்டுவெடிப்பு நடைபெறுவது என்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல,  அது கட்டுப்படுத்த வேண்டியது. காவல்துறை இந்த விஷயத்துல விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகள் யார் ?

இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்று ஒன்றிய அரசினுடைய NIA போன்ற புலனாய்வு அமைப்புகள்  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப சொல்றது அதுதான். இது  ஒரு சமூகத்தை நோக்கி சென்று விடக்கூடாது. ஒரு சமூகத்தை குற்றவாளியாக நிறுத்தி விடக்கூடாது. அதேபோல இந்த தவறுகளை யார் செய்தாலும் அதுல, மத பாரபட்சமோ, மொழி பாரபட்சமோ,  எந்த பாரபட்சமும் இன்றி, அமைதியை நல்லிணக்கத்தை கெடுக்க கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதில் ஒரு போதும் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பாரபட்சம் இல்லாத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் இந்த விஷயத்தில் வலியுறுத்துறோம். ஏற்கனவே எஸ்டிபியை தொடர்ந்து கோவையில் நடந்த கேஸ் வெடிப்பு  சம்பத்தில் நாங்கள் குறிப்பிட்டு இருந்தது தான், தமிழ்நாட்டு காவல்துறை இது போன்ற விஷயங்களை,  விசாரிப்பதற்கு தகுதியான காவல்துறை.

இந்த விஷயத்தில்  அடிப்படை உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களைளே விசாரிக்க போதுமானது என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தோம். இருந்தாலும் கூட மேற்கொண்டு இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை மக்கள் முன் நிறுத்த வேண்டும். யாரும் ஒருபோதும் இதை ஆதரிக்கல,  இதுபோன்ற ஒரு நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதற்குரிய விஷயம் என தெரிவித்தார்.

Leave a Reply