தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதால் அந்தத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி விசாரிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அந்த நேரத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது அதில் குறிப்பாக தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி அன்றே மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது இந்த விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்று பதிலளித்துள்ளார் அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்கள் 100 சதவீத வாக்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தேர்தலின் நோக்கம் ஆகவே ஏப்ரல் 18ம் தேதி திருவிழா  நடைபெறும் போது மக்கள் எவ்வாறு 100  சதவீத வாக்குகளை செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு தேர்தல் ஆணையம் கூடுதலாக 2 மணி நேரத்தை ஒதுக்க வருவதாக கூறிய போதிலும் நீதிபதி இது குறித்து தெளிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார் திருவிழாவின்போது தேர்தல் வைப்பதே 100%  வாக்கினை உறுதிப்படுத்த வேண்டும் என்று  எடுத்த முடிவிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்குவது போலவே ஆகவே இப்படி செயல்படுவது நல்லது அல்ல என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்

மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நாளை பதில் மனு தாக்கல் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்றும் தவறினால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி வழக்கை நாளையதினம் தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி.