தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.