நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் .
அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நிதியுதவி வழங்கி உள்ளார். மாணவியின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்,
அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜக சார்பில் கல்வி மருத்துவப் படிப்புச் செலவுக்கான நிதியுதவியை வழங்கியுள்ளோம் . மேலும் கல்விக்கான நிதி உதவி வழங்குவது என்பது விளம்பரத்திற்காக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக விமர்சிக்கும் ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் தற்கொலை செய்யக் கூடாது என ஏன் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைகோ தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல் பேசி வருகிறார் என்றும் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளார்.