தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் பின்னணி பாடகிக்கு “பத்ம பூஷன்” விருது…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

வருடந்தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில்  மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒர நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உட்பட பல்வேறு பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply