தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மழை எப்படினு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. வங்கக் கடல் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கடலூர், மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், சில இடங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அதிகமான இடங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அதிகமான இடங்களில் மிதமான மழையும் பெய்யலாம். இதைப்போன்று நாளை மறுநாள் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *