தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற 30_ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

Image result for காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள இது குறித்து வெளியிட்ட  முன்னறிவிப்பில் , வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கே சுமார் 1760 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது . அடுத்த 24 மணிநேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வழுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்கின்றது.

இதனால் வருகின்ற 30_ஆம் தேதி வடதமிழகம், கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கின்றது. இதனால் வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30_ஆம் தேதி மற்றும் மே 1_ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும். எனவே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் அனைவரும் வருகின்ற  28_ஆம்  தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.