தமிழ்நாடு பிரீமியர் லீக் : 58 ரன் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றி …!!

தமிழ்நாடு பிரீமியர் லீக்  20-20 கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றிபெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி அணியும் ,  காஞ்சி அணியும் மோதியது.

Image result for காஞ்சி அணி

முதலில் ஆடிய காஞ்சி அணியின் சித்தார்த் மற்றும் பாபா அபராஜித்_தின்  அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை துரத்திய தூத்துக்குடி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியுற்றது. இப்போட்டியில் அதிரடியாக ரன் குவித்த காஞ்சி கேப்டன் பாபா அபராஜித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.