நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்…அமைச்சர் மனம் நெகிழ பேட்டி..!!

அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  விஜயபாஸ்கர் விழாவை   தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர்  குடும்பத்திற்கு   பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை  வழங்கினார்கள்.மேலும்  உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

Image result for jayakumar and vijayabaskar

இதை தொடர்ந்து  நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதன்மை  மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குகிறது என்று  கூறியதோடு நானும் அமைச்சர் ஜெயகுமாரும் உடல் உறுப்பை தானம் செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.