“தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” தமிழிசை வேண்டுகோள் …!!

தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள்.

Image result for தமிழிசை

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி , தமிழகத்தில் ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்க வேண்டும். இதனை சரி செய்ய காவல்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.