தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே கடனில் தான் உள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் IOB வங்கியில் வாங்கிய ரூ 5,52,73,825 கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் செலுத்த வேண்டிய வட்டி , இதர செலவை வசூலிக்க அவரின் சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , கேப்டனின் வாழ்கை சிறந்த புத்தகம் . தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி நிலைமைகள் இதுதான். எங்களுடைய ஒரு மகன் நடிக்கின்றான், இன்னொரு மகன் புதிய தொழில் தொடக்கி இருக்கிறாரார். கஷ்டப்பட்டு கடனை அடைத்து கல்லூரியை மீட்டெடுப்போம். தமிழகம் கடனில் தான் இருக்கின்றது , இந்தியாவே கடனில் தான் இருக்கின்றது என்று பிரேமலதா கூறியுள்ளார்.