தமிழ் நடிகரை காதலிக்கும் விமலா ராமன்?…. வெளியான பர்த்டே போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமான வினய், அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்தார். மேலும் துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் வினய். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் உள்ளதாக கடந்த சில வருடங்களாக தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில் விமலா ராமன் தன் காதலர் வினய் மற்றும் பெற்றோருடன் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த விமலா ராமன், குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு குடும்பத்தினரில் ஒருத்தராக வினய்யை குறிப்பிட்டதால், அவரது காதலை விமலா ராமன் ஏற்றுக் கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply