தமிழ் மொழி வளர்ச்சி வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி கடலூரை சேர்ந்த செல்வகுமார் இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்ட ஆறு மொழிகளில் பழமையானது தமிழ்மொழி தான். ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத மொழிக்கு 643 கோடி ஒதுக்கப்பட்டது.  தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு  22 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே செம்மொழி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலை பல்கலை யாக மாற்றவும், இந்தியா முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல கல்வி நிறுவனங்களை தொடங்கவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதி  ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *