தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்….. திரையுலகம் அதிர்ச்சி….!!

 பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் .

 

தமிழில் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குநராக   அறிமுகம் ஆனவர் மகேந்திரன் . இவர் யதார்த்த சினிமாவின் இயக்குநர் என்று புகழப்பட்டார். இவருக்கு வயது 79 . கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் க்கான பட முடிவு

 

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை  நடைபெறும். இந்நிலையில் இன்று இவர் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு தமிழ் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .