“5_வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைப்பு” அனுமதி வழங்காத தமிழ் வளர்ச்சி துறை….!!

தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின்  நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை  கண்டறிய கடந்த  2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கிடைத்தது.

அகழாய்வு க்கான பட முடிவு

இப்படி 4 கட்டமாக நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்ட 14, 500 பொருட்களை காட்சிப்படுத்த தமிழக அரசு 1 ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில்  கீழடியில்5_ஆம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 5ம் கட்ட  அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்காத காரணத்தால் 5வது கட்ட அகழாய்வு பணி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.