வாகைச்சூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஜிப்ரான். இவரின் இசையால் பல விருதுகளையும், பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் கமல்ஹசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், தூங்காவனம்,பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவர் கமல்ஹசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிகர் தல அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் ‘நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று கூறியுள்ளார். அஜித் கூறியது என் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார். விரைவில் ஜிப்ரான் தல அஜித் படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.