முடிஞ்சா வேல பாரு….. இல்லனா போயிரு…. சீமான் சர்சை பேச்சு……வைரலாகும் ஆடியோ….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டரிடம் பேசும் ஆடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவில்  40 பாராளுமன்ற தொகுதி  மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு அணியும் , மக்கள் நீதி மய்யம் , நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட_வை களம் இறங்கி வேட்பாளர் பட்டியல் வெளியீடு என அடுத்தடுத்த நகர்வை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொண்டரிடம் பேசும் ஆடியோ வெளியாகியது.

Image result for சீமான்

அதில் சீமான் நான் சொல்லும் நபர்தான் வேட்பாளர்….. , நீ என்ன சொல்லுறது…. புடிச்ச கட்சிக்கு வேலைய பாரு இல்லை என்றால் போயிரு…!! என்று தொண்டரிடம்  ஆடியோ  சமூக வலைத்தளத்தில்  வைரலாகி உள்ளது. கீழே அதற்கான ஆடியோ பதிவு உள்ளது .