சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ரோஸ் வாட்டர்:

 இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள்  புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.

தயிர்:

தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு,  10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்

தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

பெண்களே…. 30 நாட்களில் முகம் பளபளப்பாக…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச்…

‘மரு’வை போக்குவது எப்படி?… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் உடலில் இருக்கும் மருவை மிக எளிய முறையில் எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் தங்களின் அழகு…

பெண்களே உங்கள் அழகை பாதுகாக்க…. நச்சுனு 4 டிப்ஸ்…!!!

பெண்கள் முக அழகை பாதுகாப்பதற்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு…

“என்றும் இளமையுடன் இருக்க”… சில எளிய டிப்ஸ்… ட்ரை பண்ணுங்க..!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை…

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில்…

“இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க”… “முகப்பருக்கள்” இருந்த இடமே இல்லாம போயிடும்..!!

முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.…

கழுத்தில் உள்ள கருமையை போக்க… இத மட்டும் செஞ்சா போதும்… 1 வாரத்தில் ரிசல்ட்…!!!

பெண்களுக்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க ஆரஞ்சு போடியில் இதனை சேர்த்து தடவி வந்தால் கருமை நீங்கி பளபளப்பாகும். பெண்களுக்கு தங்களின்…

அக்குளில் பகுதி கருமை நிறத்தில் தோற்றம் அளிகுதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… மாற்றம் நிச்சயம்…!!!

அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:  இயற்கையான…