#T20WorldCup: நமீபியாவை வென்றது நியூசிலாந்து….! 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,இறுதியில் களமிறங்கிய  கிளென் பிலீப்ஸ் – ஜேம்ஸ் நீஷம் ஜோடி அதிரடி காட்டினர் .இதில் கிளென் பிலீப்ஸ் 39 ரன்னும்,  ஜேம்ஸ் நீஷம் 35 ரன்னும் எடுத்தனர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள்  குவித்தது. இதன்பிறகு 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது.  ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இதனால்  சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .இறுதியாக நமீபியா அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்னில் சுருண்டது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.