#T20WorldCup: ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து ….! வெளியேறியது இந்தியா …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது .

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா சத்ரான் 73 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது .

இதில் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் – டெரில் மிட்செல் ஜோடி களமிறங்கினர் .இதில் கப்தில் 28 ரன்னும் , மிட்செல் 17 ரன்னும் எடுத்து வெளியேறினர்.இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன்-டேவன் கான்வே ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதோடு நியூசிலாந்து அணியின் வெற்றியால் இந்திய அணியின் அரைஇறுதி கனவு தகர்ந்தது .