#T20WorldCup: இந்திய அணியில் திடீர் மாற்றம்… இவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்ப்பு..!!

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ஆம் தேதி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான்  அறிவிக்கப்பட்டது..

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பிறகு அகில இந்திய மூத்த தேர்வுக்குழு ஷர்துல் தாக்கூரை 15 பேர் கொண்ட முக்கிய அணியில் சேர்த்துள்ளது. 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற ஆல்-ரவுண்டர் அக்ஸர் பட்டேல் இப்போது ஸ்டாண்ட்-பை வீரர்களின் பட்டியலில் இருப்பார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

காத்திருப்பு வீரர்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்ஸர் படேல்

பயிற்சி குழுவில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் :

ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கிருஷ்ணப்பா கௌதம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *