T20 World Cup : நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக்கோப்பை  தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் 10 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 44 ரன்னில் சுருண்டது.

இதன் பிறகு 45 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது .இதில் 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி இலக்கை எட்டியது. இதில் அதிரடியாக விளையாடிய குசால் பெரேரா 33 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *