ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக்!!

ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் : 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1

நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு

பால் – 200 மில்லி

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

Nuts க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து  கொள்ளவேண்டும் .பின்  பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை  சர்க்கரைவள்ளிக் கிழங்குடன்  சேர்த்து பிசைந்து  பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறினால் சூப்பரான ஸ்வீட் பொட்டேட்டோ  மில்க் ஷேக்  தயார் !!!