சுவையான ரவை குலோப்ஜாமுன்…!

ரவையை பயன்படுத்தி சுவையான குலோப்ஜாமுன் செய்யலாம்…

தேவையான பொருட்கள்:

சர்க்கரை -2 கப்
ரவை -1 கப்
நெய்
ஏலக்காய் பொடி-சிறிதளவு
பால் -3 கப்
தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து பாகு பதம் வந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

ஒரு வாணலியில் ஒரு கப் அளவிற்கு ரவையை ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அதே சமயத்தில் ரவையின் நிறம் மாறிவிடக் கூடாது. இதில் மூன்று கப் அளவிற்கு பால்,2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளலாம். மிதமான வெப்பத்தில் 6 நிமிடம் வேக வைக்கவும். நன்கு வெந்த பிறகு சிறிதுநேரம் ஆறவிடவும். பின்பு  மிருதுவான பதம் வரும்வரை நன்கு அழுத்தி பிசைந்துவிடுங்கள்.

 கையில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தேய்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள்.வாணலியில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் உருண்டைகளை 7 நிமிடம் வரை நன்கு வேகவைத்து பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள். எண்ணெய் வடிந்தப்பின் உடனே அதை சக்கரை பாகுடன் சேர்த்துவிடுங்கள். சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கவேண்டும்.சர்க்கரை பாகினை ஓரளவுக்கு சேர்த்து உருண்டைகளை திருப்பி விட்டு  மூடி வைத்துவிடுங்கள். 5 முதல் 8 மணி நேரம் ஊறவிட்டு பிறகு சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *