அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தலத்தில்…. கடும் பனிப்பொழிவு…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குவது லேக் தாஹோ தான். இங்கு சுமார் 50 அடி உயரத்திற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் கூரைகள் மேல் குவிந்து கிடக்கும் பனியின் பாரம் தாங்காமல் கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

மேலும் சில பகுதிகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து தாஹோ பகுதியில் மார்ச் 28ஆம் தேதி வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.