காப்பான் படத்தில் சூர்யா போராளியா இல்லை பாதுகாவலரா…. ரசிகர்கள் கேள்வி…!!!

காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.       இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Related image

இந்நிலையில் காப்பான்படத்தில்  நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்ததாகும். ஆனால் டீசரை பார்க்கும் போது படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக இல்லை போராளியா? என்ற கேள்வி  தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இப்படம் ஆகஸ்ட் 30_ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.