சூர்யா-42: தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இப்போது சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா-42 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் உள்ளிட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா-42 குறித்து தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பகிர்ந்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது, வருகிற ஏப்ரல் மாதத்தில் சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அதோடு மே மாதத்தில் டீசர் வெளியாகும் என கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் புரோமோ எக்ஸ்ட்ராடினரியாக உருவாகி உள்ளதாகவும் சொல்லி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறார்.