ஜோதிகாவின் கடைசி நாள் படப்பிடிப்பு….. வாழ்த்திய சூர்யா…!!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார்.
காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிவடைந்த நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். இப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.