சூர்யா-ஜோதிகா ஜோடியாக யாரை சந்தித்தார்கள் தெரியுமா?…. வெளியான போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது வரலாற்று கதை என்பதால் மிகப் பெரிய பட்ஜெட் ஒதுக்கி படத்தை தயாரித்து வருகின்றனர். அதோடு லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படமான தளபதி-67 படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூர்யா-ஜோதிகாவை, மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பானது தளபதி-67 செட்டில் நடந்ததா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.