காப்பான் திரைப்படம் வெளியாகும்போது பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் என்று சூர்யா ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான “ஹெல்மட்” வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான “காப்பான்” ஆக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா ரசிகர்கள் காப்பான் திரைப்படம் வெளியாகும் போது கட் அவுட் பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். முன்னதாக சென்னையில் பைக்கில் சென்ற 23 வயதான சுபஸ்ரீ சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனரால் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான "ஹெல்மட்" வழங்கினால்
அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும்.@karthickselvaa— Arjun Saravanan (@ArjunSaravanan5) September 15, 2019