அரசியலை பார்த்து அருவருப்பு…. சுருட்டை தலைமுடியை பார்த்து கேலி…. மனம் திறந்த தனுஷ் பட நடிகை….!!!!

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் “டாப்சி”. இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்து உள்ளார்.

அதாவது “நான் ஆரம்பக் காலத்தில் இந்திய அழகி போட்டிகளில் கலந்துகொண்டேன். அப்போது அங்கு இருந்த அரசியலை பார்த்து எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. மிகவும் வேதனையடைந்தேன். என் சுருட்டை தலைமுடியை பார்த்து பலரும் கேலி செய்ததோடு, இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற முடியாது என கூறினர். அந்த நாட்கள் எனக்கு ஒரு கெட்ட கனவாகவே உள்ளது” என்று டாப்சி கூறினார்.

Leave a Reply