ஆச்சரியம்… ஆனால் உண்மை… இந்த மாணவியின் திறமை… குவியும் பாராட்டுக்கள்..!!

கர்நாடகாவில் சிவாஜி பட பாணியில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதி சிறுமி ஒருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், மங்களூருவை சேர்ந்த 16 வயது மாணவியான ஆதி ஸ்வரூபா என்பவர் இரண்டு கைகளாலும் வேறு வேறு மொழிகளில் எழுதும் திறமையை படைத்துள்ளார். ஒரு கையால் கன்னடமும், ஆங்கிலமும் எழுதி அசத்துகிறார். இப்படி இரண்டு கைகளினாலும் ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை ஆதி ஸ்வரூபா எழுதிய ஆச்சரியப்படுத்துகிறார். எழுதுவது மட்டுமில்லாமல் பல குரலில் பேசுவது, ஓவியம் வரைவது, பாடுவது என பல திறமைகளையும் கொண்டுள்ளார்.

இவரின் பன்முகத் திறமை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சிறுவயது முதல் எடுத்துக்கொண்ட பயிற்சியே இதற்கு காரணம் என்று ஆதி ஸ்வரூபா கூறியிருக்கிறார். முறையான பயிற்சியால் மட்டுமே இதை சாதிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். மாணவியின் இந்த அற்புதத் திறமை பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவ அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *