அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்..!!!

காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி முதன்முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் பலரது முன்பு தான் அவமானப்பட்டதை சரி செய்ய பல கோடியை வாரி இறைத்திருக்கும் ரகசியத்தை அவருடைய மனைவி அம்பலப்படுத்தி இருக்கிறார். சூரி சாலிகிராமத்தில் அதிக விலைக்கு ஆபீசை வாங்கியபோது ஒன்றுமில்லாத இடத்திற்கு ஏன் இவ்வளவு காசு கொடுத்து வாங்குவீர்கள் என சூரியின் மனைவி கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு சூரி நான் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது இதே இடத்தில் பல மணி நேரம் காத்து கிடந்ததாகவும் ஒரு நாள் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதிரில் உள்ள இந்த டீக்கடையில் தான் டிபன் வாங்கி கொடுத்தார்கள் எனவும் இப்போது அந்த இடத்திற்கு எதிரே ஆபீஸ் வாங்கியதை நினைக்கும் போது தான் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் பரிசாக நினைப்பதாகவும் தன் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.