அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் பிரபு…!!!

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார். 

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல்  ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

Image result for அசோக் சவானும்

மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு வந்திறங்கிய விமானத்தில் ஒரு பெட்டி கொண்டு வரப்பட்டதாகவும், இந்த பெட்டில் மாம்பழங்கள் இல்லை என்றும், வேறு ஏதோ ஒன்று உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Image result for மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு

அசோக் சவானின் இந்த கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு எனது சட்டை பையில் 15 ரூபாய் கூட இல்லை.  இதில், ரூ.15 கோடி என்ற கேள்விக்கு இடமேது? என கூறியுள்ளார்.