”ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி” கைவிரித்தது உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார்.விசாரணை நடந்து வருகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையை அவருடைய முன்ஜாமின் மனு என்பது அர்த்தமற்றது. அது காலாவதி ஆகிவிட்டது. இத முன்ஜாமின் மனுவை விசாரணை செய்வதில் அர்த்தமில்லை என்று கூறி முன்ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.