“குழந்தை விற்பனை வழக்கு” 4 பேருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

ராசிபுரத்தில் குழ்நதை விற்பனை வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அமுதவல்லி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.  அதன் பின் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில்,

Image result for குழந்தை விற்பனை

அமுதவல்லி ,அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றும் அவர்களுக்கு உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் , லீனா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மருத்துவர் உட்பட 10 பேர் கொண்ட  குழுவின் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் இருக்கும் 4 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நால்வரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.