அதிமுகவுக்கு ஆதரவு…… எந்த கட்சியாக இருந்தா என்ன ? சரத்குமார் பேட்டி..!!

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சரத்குமாரை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கேட்ட்டார்.

Image result for sarathkumar  ops

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். மேலும் அதிமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் . மோடிக்கு எதிராகப் பேசிவிட்டு தற்போது மோடிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது சமத்துவம், சகோதரத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். எந்தக் கட்சியாக இருந்தால் என்ன? அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க என எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்தே தான் தேர்தல்  பிரசாரம் செய்வேன்” என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.