அதிமுக_விற்கு ஆதரவு ……. திமுக தொழுநோயாளி போல நடத்துகின்றது ….. N.R தனபாலன் விளக்கம்….!!

திமுக எங்களை தொழு நோயாளி போல நடத்துகின்றது என்று கூறி பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி ,  பா.ம.க , தே.மு.தி.க , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது . இந்நிலையில்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின்  தலைவர் N.R தனபாலன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் .

Image result for பெருந்தலைவர் மக்கள் கட்சி

அப்போது அவர் கூறுகையில் , பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் வெற்றிக்கு முழுமையாக உழைப்போம். வரவிருக்கின்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் எண்களின் ஆதரவு உண்டு என்ற கடிதத்தை முதல்வரிடமும் , துணை முதல்வரிடமும் அளித்தோம் என்றார் . மேலும் பேசிய அவர் ,  நாங்கள் தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தோடு பயணித்துக்  கொண்டிருந்தோம் . தற்போது  எங்களை எல்லாம் தொழு நோயாளி போல தனியாக மேடை அமைத்து நடத்துகின்றார்கள் . கூட்டணி தொடர்பாக எங்களிடம் அவர்கள் பேசவில்லை , எந்தவிதமான தொடர்பும் கொள்ளவில்லை  என்று தெரிவித்தார் .