CSK VS RCB போட்டி….. ஜாலியாக மைதானத்தில் வந்து கண்டுகளித்த “சூப்பர் ஸ்டார்”….!!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணியின் போட்டியை  சேப்பாக்கம் மைதானத்தில் வந்து  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக கண்டு களித்தார்.   

ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் எடுத்தார்.. சென்னை அணியில் ஹர்பஜன்,  இம்ரான் தாஹிர் இருவரும் தலா 3  விக்கெட்டுகளும்,  ஜடேஜா 2,  பிராவோ 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆமை வேகத்தில் பொறுமையாக ஆடி 17.4 ஓவர்களில் 71/3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. சென்னை அணியில் ராயுடு 28, ரெய்னா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்..  ஜாதவ் 13*, ஜடேஜா 06* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று நடைபெற்ற  இந்த  போட்டியை காண நேரடியாக வந்து ஜாலியாக கண்டு களித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறிய போது  ரசிகர்கள் அவரை  சூழ்ந்தனர். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். சூப்பர் ஸ்டார் போட்டியை காண மைதானத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட  புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.