சூப்பரோ‌ சூப்பர்!….. இளைஞர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை வாங்க வேண்டும் என்றால் உத்தரபிரதேச மாநிலத்தின் குடிமகனாக இருக்க வேண்டும். அதன் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் குறைந்தது 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதனையடுத்து லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனுக்கு விண்ணப்பிக்கும் நபர் முதுகலை பட்டப்படிப்பு அல்லது மருத்துவ படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அதோடு அவர்களின் குடும்ப வருமானம் மாதம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் இருப்பின் up.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் அட்டை எண், உரிய கல்வி சான்றிதழ், புகைப்படம் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.