சாதத்திற்கு ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  !!!

சாதம், சப்பாத்தி, இட்லி ,தோசைக்கு  ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  செய்யலாம் வாங்க . 

தேவையான பொருட்கள்:

மொச்சை – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

துருவிய தேங்காய் – 1/4 கப்

மிளகாய்தூள் – 1/2  டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/4  டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

உப்பு – தேவைக்கு ஏற்ப

மொச்சை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை குக்கரில்  3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் . மிக்ஸியில் தேங்காய்த்துருவல், மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , அரைத்த விழுது மற்றும் வேக வைத்த மொச்சை  சேர்த்து ,சிறிது  தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மொச்சை மசாலா தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *