வலுவான அடித்தளம் கொடுத்த வார்னர், பேர்ஸ்டோவ்…… சன்ரைசர்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 165/3…!!

வார்னர், பேர்ஸ்டோவ் அதிரடி தொடக்கத்தால் சன்ரைசர்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 165/3 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

 

அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 55 பந்துகளில் 102* ரன்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில்  இருந்தார். ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 16*(9) ரன்களும், பட்லர் 5 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியில்  ரஷித் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா  1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தனர். இதையடுத்து வார்னர் 69 ரன்களில் ஆட்டமிழக்க அதைதொடர்ந்து பேர்ஸ்டோ அரைசதம் அடிப்பார் என்ற நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் கேன் வில்லியம்சனும், விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர்.ஒருபுறம்  விஜய் சங்கர் அதிரடியில் இறங்கினார். இதையடுத்து வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின் மனிஷ் பாண்டே களமிறங்கினார்.  விஜய் சங்கர் 34* (13) ரன்களிளும், மனிஷ் பாண்டே 0ரன்களிலும்   விளையாடி வருகின்றனர்..