வார்னர், பேர்ஸ்டோவ், விஜய் சங்கர் அதிரடி ஆட்டம்….. ராஜஸ்தான் அணிக்கு 2வது தோல்வி….!!

வார்னர், பேர்ஸ்டோவ் அதிரடி தொடக்கத்தால்  சன்ரைசர்ஸ் அணி   19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 55 பந்துகளில் 102* ரன்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில்  இருந்தார். ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 16*(9) ரன்களும், பட்லர் 5 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியில்  ரஷித் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா  1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19  ஓவரில் 201 ரன்கள்  எடுத்து வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 69  ரன்கள்  (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) மற்றும் பேர்ஸ்டோவ் 28 பந்துகளில் 45 ரன்கள் குவித்து   ஆட்டமிழந்தனர். அதன் பின் விஜய் சங்கர் 33 (15) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் யூசுப்பதான் 16*, ரஷித் கான் 15* ரன்களிளும் கடைசி வரை ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 

.