பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிய ஆட்டத்தில் ஜொனி பைர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியின் ஜொனி பைர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசிய ஜொனி பைர்ஸ்டோவ் , டேவிட் வார்னர் சதம் அடித்தனர். IPL வரலாற்றில் ஒரு அணியில் உள்ள 2 வீரர்களும் சதம் அடித்தது இதுவே முதல் முறை. இவர்களின் ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.
ஜொனி பைர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் அடித்த ரன்னின் விவரம் வருமாறு :
ஜொனி பைர்ஸ்டோவ் – 114 (56 பந்து ) 12 பௌண்டரி , 07 சிக்ஸர் – அவுட்
டேவிட் வார்னர்* – 100 (55 பந்து ) 05 பௌண்டரி , 05சிக்ஸர் – நாட் அவுட்