வார்னர், பேர்ஸ்டோ அதிரடியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி…!!

 ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது    

ஐ.பி.எல் 38 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் மாலை  4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  ஹைதராபாத்  அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 (47) ரன்களும், ரின்கு சிங் 30 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத்  அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா, ரசித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி காட்டினர். இருவரும் அரைசதம் கடந்தனர். அதன் பிறகு 13வது ஓவரில் பிருத்வி ராஜ் பந்து வீச்சில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர்  67 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து  கேன் வில்லியம்சன் களமிறங்கினார். அதன் பிறகும் அதிரடியை தொடர்ந்த பேர்ஸ்டோ 15 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டார். இறுதியில் ஹைதராபாத் அணி  15 ஓவரில் 1 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 80* (43) ரன்களும், கேன் வில்லியம்சன் 8* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.