இன்றைய ஐபிஎல் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதல்…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன

12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில்  இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.