இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல் இடம் பிடித்துள்ளார்.
ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .

குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே சன்னிலியோன் அதிகமாக தேடப்பட்டுள்ளார். மேலும் , கடந்த வருடமும் சன்னி லியோனே இந்தியாவில் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவிக்கையில், என்னுடைய குழுவானது இவ்விவரத்தை என்னிடம் கொண்டு வந்தனர். அதன்பின் , எனக்காகவே உள்ள ரசிகர்களால், சிறந்த உணர்வை கொண்டிருக்கிறேன் எனக் கூறினார். மேலும் இந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.